Thursday, July 7, 2011

அன்பெனும் பூங்காற்று - 2


அன்பெனும் பூங்காற்று - 2

அருணால் வழங்கப்பட்ட அந்த புகைப்படக் குறிப்பேட்டை பார்த்துக் கொண்டிருந்த மோகனுடைய கண்களில் நீர் பெருக்கெடுத்தது. யார் அந்த அருண்...? அவனுக்கும் மோகனுக்கும் என்ன உறவு...? இப்பூவலகில் பரந்துபட்ட நாடுகளில், வழங்கப்படும் அல்லது வழங்கப்பட்ட மொழிகள் எதில் தேடினாலும் அந்த உறவை விளக்கும் சொற்கள் காணப்படமாட்டா... அந்த உறவை நாம் விரிவாக அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள சுமார் 24 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்க வேண்டும். நாம் இப்போது அதைத்தான் செய்யப்போகிறோம்... வாய் வேகம்... மனோ வேகம் எனச் சொல்லப்படும் வேகத்தில் நாம் இன்றைக்கு 24 ஆண்டுகளுக்கு முந்தைய நெறுப்பூரின் மேட்டுத் தெருவிற்குச் செல்வோம்...

நெறும்பூரின் மிகவும் புகழ்பெற்ற மனிதர், சோமசுந்தரம் அவர்கள் தான். அவர்தான் மோகனின் அப்பா. மோகனுக்கு இப்போது 5 வயது. முதல் வகுப்பில் படிக்கிறான். சோமசுந்தரம், மெத்தப் படித்தவர், தொழிலதிபர். அவரது மனைவி, வசுந்தரா, மோகனின் அம்மா, அவரும் மெத்தப் படித்தவர். கணவனின் உளம் அறிந்து நடப்பதில் வல்லவர். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தொழிலை நடத்தி வந்தனர். மோகன்ராஜ், வீட்டின் ஒரே செல்லப்பிள்ளை. சோமசுந்தரம் வசுந்தரா தம்பதிக்கு வெகுநாட்கள் கழித்து பிறந்த பிள்ளை. பல கோடி சொத்துகளுக்கு ஒரே வாரிசு. ஆனால், நெறுப்பூரில் அவர்கள் இருந்த வீடு, சோமசுந்தரத்தின் முன்னோர் வாழ்ந்த பூர்வீக வீடு. அந்த வீட்டின் அருகில் இருந்த வீடுகளில் எல்லாம் சோமசுந்தரத்தின் உறவினர்கள் இருந்தனர். அவர்களும் மிகவும் பெரிய பணக்காரர்கள் தான்.

5 வயது மோகனின் பிடித்தமான பொழுதுபோக்கு, தன் வீட்டு மதிற்சுவரின் அருகில் அமர்ந்து கொண்டு தெருவில் போவோர் வருவோரை வேடிக்கைப் பார்ப்பது. அன்று அவர்களின் எதிர்வீடு அல்லோலகல்லோலப் பட்டது. அங்கு தனது தந்தையின் நண்பரான சிவசுப்ரமணியன் என்ற சிவசு இன்று குடிவருகிறார். மோகனின் தந்தை தான் முன் நின்று எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். வசுந்தரவும் சோமுவும் சிவசுவின் குடும்பத்தினரின் வருகைக்காகக் காத்திருந்தனர். சிவசு, தனது குடும்பத்தினருடன் ஒரு பெரிய வண்டியில் வந்தார். முதலில் சிவசு இறங்கினார். அவர் மிகவும் அமைதியான தோற்றமுடைய நபர். அவருக்குப் பின் மிக அழகு நிறைந்த ஒரு பெண்மனி இறங்கினார். அவர்தான் தெய்வானை, சிவசுவின் மனைவி. அவளுடைய கையில் ஒரு வயதேயான ஒரு குழந்தை. அந்தக் குழந்தையின் முகத்தில் களை சொட்டியது. அது தான் அருண். அவர்களுடைய ஒரே புதல்வன். சோமுவும், வசுந்தராவும் சிவசுவையும், தெய்வானையையும் வரவேற்பதில் திளைத்திருந்தனர். வசுந்தரா, அருணைத் தன் கையில் வாங்கி வைத்துக் கொண்டாள். அருணின், மழலைச் சிரிப்பு அனைவரையும் கவர்ந்திழுத்தது. அவனுடைய ஒளி பொருந்திய கண்களும், கொழு கொழு கன்னங்களும் அவனை அந்த வட்டாரத்திலேயே மிகவும் புகழ்பெற்ற குழந்தையாகச் செய்துவிடும் போலிருந்தது.

வசுந்தரா தன் மகனை அழைத்தாள்.
மோகன்... மோகன்... இங்க வா...”, மோகன் ஓடி வந்தான். தன் தாயின் கையில் இருக்கும் குழந்தையைப் பார்த்ததும், மோகனுக்கு மகிழ்ச்சி பொங்கியது.
அம்மா... இந்தப் பாப்பா யாருமா...?” மோகன் கேட்டான்.
இது அந்த அங்கிள் ஆண்ட்டியோட பாப்பா... உன் தம்பி... இவன் பேரு அருண்... உனக்குப் பிடிச்சுருக்கா...?” வசுந்தரா கேட்டாள்.
 ஹை... என் தம்பி பாப்பாவா... எனக்கு பிடிச்சிருக்கு... ஓய் குட்டிப் பையா... வா...வா...வா...மோகன் தன் பிஞ்சுக் கைகளைத் தட்டி குழந்தையை அழைத்தான்.
திடீரென, அருண் பாப்பா இரைச்சலாய் சிரித்தான். மோகனைப் பார்த்ததும் அவனிடத்தில் தாவிக்கொண்டு சென்றான். அனைவருக்கு இது ஒரே வியப்பாய் போய்விட்டது. ஆனால், சிவசுவும், சோமுவும் மிகவும் மகிழ்ந்தனர். தங்கள் குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் அண்ணன் தம்பியாய் வளர வேண்டும் என்பது அவர்கள் இருவரின் உள்ளக்கிடக்கையாய் இருந்தது.
சிவசுவின் குடும்பம் நன்றாய் குடியமர்ந்து பழகத் துவங்கியது. அன்றாடம் பள்ளி முடிந்ததும், மோகன், சிவசுவின் வீட்டிற்கு சென்று விடுவான். அருணுடன் விளையாடுவது தான் அவனுடைய பொழுது போக்கு. அருணும் மோகனைப் பார்த்தவுடன் எக்காளமிடுவான்.
மோகன் குழந்தையை தூக்கிக் கொஞ்சுவதும், விளையாடுவதும், அவனுடைய மழலை மொழியைக் கேட்டு மகிழ்வதும், அவன் பிஞ்சுக் கரங்களைப் பற்றி மகிழ்வதும் என அருணுடன் இருந்தால் பொழுது போவதே தெரியாது. எப்போதாவது அருண் அழுதால், மோகனுக்குப் பொறுக்காது. உடனே அவன் அழுகை நிறுத்த இவன் குட்டிக்கரணம் அடிப்பதும், கைதட்டி ஒலியெழுப்புவதும் என விளையாட்டுக் காட்டுவான். அவன் அதற்கும் அழுகையை நிறுத்தவில்லை என்றால், இவன் கலவரமாகி விடுவான். தெய்வானையும் வசுந்தராவும் மோகன் குழந்தை மேல் வைத்திருந்த அன்பையும் பாசத்தையும் பார்த்து மகிழ்ச்சி அடையாத நாளே இல்லை... அருண் முதல் முதலாய் கால்பதித்து நடந்தபோதும், சிறு சிறு சொற்கள் பேசி அழைத்த போதும், சற்று அறிவுடைமையுடன் செயல்பட்ட போதும், மோகன் அருகில் இருந்து பார்த்து ரசித்தான். அருணுக்கு இரண்டு வயது ஆகும் போது மோகனுடனே எப்போதும் இருப்பான். அன்றாடம் மோகன் பள்ளிக்கு செல்வது கூட அருணை ஏமாற்றி விட்டுத்தான் செல்ல வேண்டும். அவ்வாறு அவன் சென்ற பிறகு சுமார் அரை மணி நேரமாவது அருண் அழுது கொண்டே இருப்பான். அவன் அம்மா, வசுந்தரா அத்தை எல்லாரும் சேர்ந்துதான் அவனை அமைதிப்படுத்த இயலும்.

நாளைடைவில், அருணும், மோகனும் ஈருடல் ஓருயிர் என்பதைப் போன்ற இணைபிரியாதவர்கள் ஆனார்கள். மோகனைப் பொறுத்தவரை அருண் அவன் உடன் பிறவா தம்பி. அவனுக்கு எந்த துன்பமும் வராமல் பாதுகாக்க வேண்டிய கடமை இவனுக்கு உண்டு என எப்போதும் எண்ணுவான். அருணைப் பொறுத்த வரை, மோகன் தனக்கு மட்டுமே சொந்தமானவன். வேறு எந்தக் குழந்தையை மோகன் கொஞ்சினாலும் அருணுக்கு கோபம் வரும். அது போல, யாராவது மோகனைத் திட்டினால் அருணுக்குக் கடுமையான கோபம் வரும். மோகனுடன் சேர்ந்துதான் அருண் உணவு உண்பான். மோகன் அருகில் படுத்துக் கொண்டு அவன் மீது கால் போட்டுதான் தூங்குவான். அருண், மோகனின் உள்ளத்தில் எப்போதும் ஒளிவிடும் அன்புச்சுடரானான். மோகன், அருணின் உலகமானான்.
இவர்கள் அன்பு இதுபோலவே இருந்துவிட்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும். இன்று மோகன் பட்ட துன்பங்கள் எல்லாம் இல்லாமல் போயிருக்கும். ஆனால், விதி என்ற ஒரு வினைப்பயன் இருக்கிறது. அதன் அதிரடியான ஆட்டங்களுக்கு யாரால் தான் ஈடுகொடுக்க இயலும். அருணின் சிறுவயது முதலே அவன் மிகவும் உணர்ச்சிவயப்படும் ஒரு குழந்தையாக இருந்தான். அதிலும், மோகன் என்று வந்தால், அவன் உணர்ச்சி மிகுதியை யாராலும் கட்டுப்படுத்த இயலாது. மோகனுக்கு அருணைச் சீண்டி விளையாடுவது எப்போதும் பிடிக்கும். அவன் தன் மீது வைத்திருக்கும் அபரிமிதமான அன்பையும், உரிமையையும் உறுதி செய்து கொள்வதில் அவனுக்கு எப்போதுமே அலாதி விருப்பம். அதிலும், அவன் தன் மீது உரிமை கொண்டாடுவதைப் பார்க்க பார்க்க மோகனுக்கு மிகவும் இறுமாப்பாக இருக்கும். அவன் உள்ளம், அருணிடத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களைக் கவனிக்கத் தவறிவிட்டது. அது விதியின் விளையாட்டு. வினைப்பயன். அதை யாராலும் மாற்றிவிட முடியாது.

(தொடரும்…)

கருத்துக்களைத் தெரிவிக்க: radharjaesh18@gmail.com

அன்பெனும் பூங்காற்று - 1


அன்பெனும் பூங்காற்று - 1




அன்று மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள், குளிர் வாடை வீசிக் கொண்டிருந்த வேளை. உள்ளத்தில் காதல் பெருக்கெடுத்த காதலர்களை எல்லாம் அந்த வாடைக் காற்று வாட்டிக் கொண்டிருந்த தருணம். இளவெயிற் சூட்டில் எருமைகள் எல்லாம் குளிர்காய்ந்து கொண்டிருந்தன. அந்த முற்பகல் பொழுதில், நெறும்பூர், மேட்டுத்தெருவில், இருந்த மேட்டுக்குடி மாளிகை ஒன்றின் முன்பு ஒரு அழகிய வெளிநாட்டு வண்டி வந்து நின்றது. அதிலிருந்து எழுந்த ஒலிப்பானின் இரைச்சலில், தூங்கிக் கொண்டிருந்த வீட்டுக் காவற்காரன் எழுந்து விரைவாய் பெரிய கதவுகளைத் திறந்தான். விறைப்பாய் நின்று வணக்கம் செய்தான். அந்த மாளிகையின் வாசலில் ஒரு வயதான, கைம்பெண்ணான ஒரு அம்மாள்  வந்து நின்று யாரையோ எதிர்ப்பார்த்திருந்தாள். வண்டியைப் பார்த்ததும் அவள் முகம் ஒளிமிகுந்தது. வண்டி வந்து நின்றதும் அதிலிருந்து ஒரு இளைஞன் வெளியேறினான். அந்த அம்மாளைப் பார்த்து தன் முகம் முழுதும் பற்கள் தெரிய சிரித்தான்.
அம்மா... அம்மா... மை ஸ்வீட் அம்மா...அவன் அந்த அம்மாளை அணைத்துக் கொண்டான்.
அந்த அம்மாளின் கண்கள் கலங்கினாலும் அதை கடந்து அவள் முகத்தில் ஒரு கம்பீரம் தெறித்தது.
மோகன்... மை பேபி...அந்த அம்மாள் தன் மகனை உச்சிமுகர்ந்தாள்.
ஸோ... ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா...?” மோகன் கேட்டான். அவன் குரலில் ஒரு அக்கறை இருந்தது.
இல்லப்பா... இப்ப தான் ஒரு ஃபைவ் மினிட்ஸா... எனக்கு ஒரு மீட்டிங் போகணும்... அதுக்குள்ள உன்ன வரவேற்க நின்னிட்டுருந்தேன்...அந்த அம்மாள் சொன்னார்.
ஐ நோ... என் அம்மா இவ்ளோ நேரம் இருந்ததே பெரிய விஷயம்...மோகன் குறும்பாய்ச் சொன்னான்.
சில்லி பாய்... சரி மோகன்... நான் இப்ப மீட்டிங் கிளம்புறேன்... ஈவ்னிங் மீட் பண்ணலாம்...அவர் சொல்லிவிட்டு வேறு ஒரு உயர்வகை வண்டியில் கிளம்பிச்சென்றார்.

மோகன் என்று அழைக்கப்பட்ட மோகன்ராஜ், இளைஞனைப் போல் தோன்றினாலும், 28 வயது நிறைந்தவன். அவன் முகத்தில் தெரிந்த இளமை அவன் கண்களில் இல்லை. அதில் ஆழ்ந்த கவலையும், மிகுந்த முதிர்ச்சியும் தெரிந்தது. மோகன்ராஜ், பிறவியிலேயே மிகவும் பணக்காரனான தந்தைக்குப் பிறந்தவன். அவன் தந்தை இன்று இல்லை. ஆயினும் அவன் தாய் தான் எல்லா தொழிலையும் கவனித்துக் கொள்கிறான். மோகன்ராஜ், வணிகமேலாண்மை படிக்க அமெரிக்க நாட்டிற்குச் சென்றவன் அங்கேயே ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராக சேர்ந்துவிட்டான். அவன் மீண்டும் தாய் நாட்டிற்குத் திரும்பாததற்குக் காரணம், மேகலா... அவன் மனைவி... உண்மையைச் சொன்னால், முன்னாள் மனைவி. மோகனும் மேகலாவும் பள்ளி முதலே தோழர்கள். படிக்கச் சென்றதும் ஒரே பல்கலையில்தான். அங்கு சென்றபின் அவர்கள் காதல் விவரம் வீட்டிற்குத் தெரியவந்தது. ஆனால், அவர்களைப் பெற்றவர்களுக்கு அதில் விருப்பம் இல்லை. எனவே, மோகனும் மேகலாவும் அமெரிக்காவிலேயே திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர். மேகலா, ஒரு நவீன நாகரிக மங்கை. அவளும் மோகனும் உருகி உருகி காதலித்திருந்தாலும், அவர்கள் காதல் வாழ்க்கை விரைவில் கசந்து போனது. மோகனால் எதையும் கட்டுப்படுத்த இயலவில்லை. அதனால், அவர்கள் பிரிந்துவிட முடிவு செய்தனர். மோகனின் மகன் அருண், மேகலாவுடன் இருப்பது என்ற உடன்பாட்டை மோகன் முதலில் ஏற்கவில்லை என்றாலும், தன் மகனின் எதிர்காலம் கருதி ஏற்றுக் கொண்டான். ஆனால், அவ்வப்போது அவனைப் பார்க்கும் உரிமையை அவன் பெற்றான்.

சிலநாள் அமெரிக்காவில் அவன் வாழ்ந்திருந்தான். பின் அவன் தந்தை மறைந்த போது இந்தியா திரும்பினான். அவன் தாய் மேற்கொண்டு தொழிலைக் கவனித்துக் கொள்வதாக அறிந்தான். எனவே அவன் அமைதியாக அமெரிக்கா திரும்பினான். இருந்தாலும், தன் தாயைக் காணவேண்டும் என்ற ஆர்வத்திலும், வெகுநாட்களாக, பல ஆண்டுகளாக அவன் உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்த ஒரு கேள்விக்கு விடை காணவும், அந்த மர்மத்தை அறிந்து கொள்ளவும் அவன் இந்தியாவிற்கு வரவேண்டியிருந்தது. அதற்காகத் தான் அவன் இப்போது இங்கு வந்துள்ளான்.
மோகன், மாடிப் படிகளை ஏறி தன் அறையை அடைந்தான். வெகுநாட்களாகப் புழங்கப்படாமல் இருந்தாலும், அவன் தாய் அவ்வறையை நன்றாய் பராமரித்து வந்திருந்தாள். மோகன், அவன் படுக்கையில் அமர்ந்தான். சிறிது நேரம் பலகணியை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அவர்கள் வீட்டுத் தோட்டம் புலப்பட்டது. மெதுவாய் எழுந்து தன் உடைகளை அவிழ்த்து குளிக்க ஆயத்தமானான். தன் உடைமாற்றும் கண்ணாடி முன்பு பிறந்த மேனியாய் நின்றான். அவன் கண்கள் அவன் உடலழகை வியந்து ரசித்தது. அவன் பல முறை கண்ட காட்சிதான் என்றாலும் அதைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அலுத்துப் போவதில்லை. அவன் தன் முகத்தைப் பார்த்தான். கண்ணாடியின் மூலையில் இருந்த ஒரு ஒட்டப்பட்ட சீட்டைப் பார்த்தான். மிகவும் சிறியதாக இருந்த அந்த சீட்டைப் பார்த்ததும் அவன் முகம் சிறுத்தது. அவன் தொண்டை எச்சில் விழுங்கியது. அந்த சீட்டில் “A.M" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. மோகனுக்கு பழைய நினைவுகள் தோன்றின. அந்த அறையில் அவன் வாழ்ந்திருந்த காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளை அவன் நினைவு கூர்ந்தான்.

மோகன், சில நொடிகள் நினைவுகளில் மூழ்கிப்போனாலும், பின்னர் குளிப்பதற்காக தன் குளியலறைக்குச் சென்றான். நீர்கொதிகலனின் வெப்பத்தை சீராக்கிவிட்டு, குளியலை துவங்கினான். குளியலறைச் சுவரில் மீண்டும் ஒட்டப்பட்டிருந்த அதே சீட்டு அவனை மேலும் துன்புறுத்தியது. அவன் முகம் சுளுக்கினான். விரைந்து குளித்துவிட்டு அறைக்குள் வந்தான். உடலை உலர்த்திவிட்டு மாற்றுடை அணிந்தான். பின்னர், தன் துணியறையின் கதவைத் திறந்து அதன் உட்பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு புகைப்பட குறிப்பை எடுத்தான். அதன் ஒவ்வொரு பக்கத்திலும் அவனுடைய சிறுவயது முதல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடங்கியிருந்தன. ஆனால், அந்தப் புகைப்படங்களில் எல்லாம் அவன் மட்டும் இல்லை. அவனுடன் மற்றொருவன் அதில் இருந்தான். அவன் மோகனை விட மூன்று நான்கு வயது இளையவனாகத் தெரிந்தான். மோகன் ஒவ்வொரு புகைப்படத்திலும் அவனுடைய உருவத்தை வருடிப்பார்த்தான். அவன் அவ்வப்போது பெருமூச்செறிந்தான். இறுதிப் பக்கத்தைப் புரட்டினான். அதில் எழுதியிருந்த சொற்றொடரைப் படித்தான். அவன் கண்களில் கண்ணீர்த் திரையிட்டு அவனைப் படிக்க விடாமல் செய்தது. தன் கண்களை சிமிட்டி கண்ணீரை விழச்செய்தான். இப்போது அந்த எழுத்துக்கள், அந்த அழகிய கையெழுத்தில் நன்றாய்ப் புலப்பட்டன.
என் மோகனுக்கு அன்புடன் அருண்....

(தொடரும்...)

கருத்துக்களைத் தெரிவிக்க: radharajesh18@gmail.com

Saturday, July 2, 2011

காதலாகி கசிந்துருகி – நிறைவுப் பகுதி


-----------------------------------------------------------------------------------------------------------

காதலாகி கசிந்துருகிநிறைவுப் பகுதி

----------------------------------------------------------------------------------------------------------

காதலர்கள் கலவி நுணுக்கங்களை கடைபிடித்து மகிழ்ந்த அந்த அறையில் இப்போது அமைதி நிலவியது. ராஜேஷும் அர்ஜூனும் விழித்திருந்தனர். அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் விழுங்கிக் கொண்டிருந்தன. அர்ஜூனின் உடல் களைத்திருந்தது. உள்ளமோ உற்சாகத்தில் மிதந்தது. அவன் உடலுக்குள் ராஜேஷ் புகுந்து கொண்ட உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அவன் ஸ்பரிசம் முழுதும் ராஜேஷின் வாசனை. அவன் தேகம் முழுதும் இப்போது மிக மென்மையாக மிக உணர்ச்சி மிக்கதாக மாறிவிட்டது. ராஜேஷின் விரல்கள் அவன் மார்பில் கோலமிட்டன. அவன் அப்படியே சிலிர்ப்பின் உச்சத்தில் இருந்தான். ராஜேஷ் தன்னை ஏற்றுக் கொண்டதும், காதலிப்பதும், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னோடு ஒன்று கலந்ததும் அவன் வாழ்வில் இன்பமான தருணங்களாக அமைந்தன.

ராஜேஷ், அர்ஜூனின் ஒவ்வொரு அங்கத்தையும் நுகர்ந்து இன்பம் கண்டான். அர்ஜூனின் மென்மையான ஸ்பரிசம் அவனுக்கு அந்த தேவலோக சுகத்தை தந்தது. அர்ஜூன் தன்னுடையவன் என்ற எண்ணமே அவனுக்கு போதையைத் தந்தது. மெல்ல எழுந்த அவன், அர்ஜூனை அப்படியே கைகளில் ஏந்திக் கொண்டான். அர்ஜூன், வெட்கத்தில் சிவந்து போனான். ராஜேஷ் அர்ஜூனை குளியலறையில் சென்று இறக்கி விட்டான். பின் இருவரும் தங்கள் உடல்களைக் கழுவிக் கொண்டனர். அர்ஜூனுக்கு தன் உடலைக் கழுவிக் கொள்வதில் விருப்பம் இல்லை. அதில் ராஜேஷின் வாசம் இருக்கிறது. அதை போக்கடித்துக் கொள்வதில் அவனுக்கு உடன்பாடு இல்லை. ஆயினும் ராஜேஷ் சொன்னான்.
“ஹேய்… நீ குளிச்சதும், உன்ன நான் என்ன செய்யப்போறேன் பாரு….”
அர்ஜூன் உடல் சிலிர்த்தது. அவன் புன்னகைத்தான். அவன் எண்ணங்கள் கட்டிலின் மேல் காத்துக் கிடந்தன. இந்த விடியல் அப்படியே நின்று போய், இரவு நீண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும் என அவன் எண்ணமிட்டான்.
ராஜேஷ் அர்ஜூனை பின்புறமாக அணைத்தான். அவன் காதுமடல்களைச் செல்லமாகக் கடித்தான். அர்ஜூன் காதுகளில் வெப்பமான மூச்சுக் காற்றை எறிந்தான். அவன் கைகள் தெற்கு நோக்கிச் சென்றன. அவன் இதழோ வழுவழுப்பான அர்ஜூனின் பின்னங்கழுத்தைச் சுவைத்தது.
“ஆஆஆஅ…. ராஜேஷ்… ப்ளீஸ் டாஆஆஅ… என்னக் கொல்லாலாஆஆஆஅத…”
அர்ஜூன் பிதற்றினான். அவன் தான் தூக்கப்படுவதை உணர்ந்தான். ராஜேஷின் கைகள் அவன் இடையைச் சுற்றி பத்திரமாக கொண்டு சென்று அவனை கட்டிலில் இறக்கி விட்டன. அவன் அப்படியே கிடந்தான். ராஜேஷ் அர்ஜூனின் மேல் படர்ந்தான். கலவி விளையாட்டு துவங்கியது.

அடுத்து வந்த நாட்களில் இளம் காதலர்கள் இருவரும் இணைந்து இணைந்து மகிழ்ந்தனர். கூடிக் கூடிக் களித்தனர். அன்பு பெருக்கெடுத்து ஓடியது. இன்பம் எங்கும் பொங்கி விளையாடியது. அர்ஜூன் ஆயிரம் முறை நன்றி சொன்னான், கடவுளுக்கு. ராஜேஷ் லட்சம் முறை சொன்னான்.
அன்பும் காதலும் ஆள் பார்க்காது, கோள் பார்க்காது, நாள் பார்க்காது. ராஜேஷும் அர்ஜூனும் அன்பு கொண்ட காதலர்கள். ஆணும் ஆணும் காதலிப்பது உலகில் வியப்பான விஷயமோ, அருவறுக்கத்தக்க விஷயமோ அல்ல. காதலிப்பது எந்த பாலினத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அது காதல். காதலின் உள்ளத்தின் உணர்ச்சிதான். ஒரு பெண்ணைக் காதலிக்கும் ஆண் எந்த அளவிற்கு தனது காதலை தெய்வீகமானதாக கருதுகிறானோ, அதே அளவிற்கு ஒரு ஆணைக் காதலிக்கும் ஆணும் கருதுகிறான். இரண்டுமே காதல் தான்.
காதல் என்று சொல்லி பெண்ணை விரும்புவோர், ஏன் உடல் சார்ந்த கவர்ச்சியில் மயங்குகின்றனர். காதல் உடலியற் கூறு இல்லையெனின் அது ஒரு ஆணோடு வருவதும் சகஜம் அல்லவா….? ஏன் இந்தச் சமூகம் இருவரது அந்தரங்க வாழ்வில் நுழைகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 377 ம் பிரிவு, ஓரினச்சேர்க்கையை வன்மையாகக் கண்டிப்பதோடு, 7 ஆண்டு கடுங்காவல் முதல் அதிகபட்சம் மரணதண்டனை வரை விதிக்க வழி செய்கிறது. காதலுக்கு மரணதண்டனை… இதைவிட பெரிய அநியாயம் இருக்க முடியாது.
ஈரான் நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 7 ஓரினச்சேர்க்கை ஜோடிகள் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதில் சுமார் 6 ஜோடிகள் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். ஒரு ஜோடி 18 வயதே நிரம்பிய இளம் காதலர்கள்.
இன்னும் பல நாடுகளில் பல தண்டனைகள். காதல் மனித குலத்தில் அனைவருக்கும் பொதுவானது தானே. பெண்ணும் ஆணும் தான் காதலிக்க வேண்டும் என்ற விதியை மனிதன் தானே எழுதினான். அது ஒன்றும் இயற்கையின் விதி இல்லையே.
இன்னும் இவ்வுலகம் இதைப் புரிந்து கொள்ள பல கல்ப காலங்கள் ஆகலாம். அர்ஜூனும் ராஜேஷும் போல பல இளம் காதலர்கள் இன்னும் இந்நாட்டில் தோன்றிக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் இச்சமூகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் காதலை பகிர்ந்து இன்பமான வாழ்க்கை வாழவே செய்வார்கள். என்றும் காதல் வாழும். அது ஆணுக்கும் ஆணுக்கும் இடையே ஏற்படுவதாயிருந்தாலும், காதலுக்கு தோல்வி இல்லை.
காதலில் கசிந்துருகி வாழும் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் இக்கதை சமர்ப்பணம்.

பின்குறிப்பு: ராஜேஷும் அர்ஜூனும் பலகாலம் இன்பமாக வாழ்ந்திருந்தனர். அவர்களுடைய நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே அவர்களைப் பற்றிய உண்மைகள் தெரியும். அவர்கள் வெளிநாட்டில் சென்று தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டனர். இறப்பின் விளிம்பு வரை இணைபிரியாமல் வாழ்ந்து இந்த புவியின் காற்றோட்டத்தில் கலந்து விட்டனர். அவர்கள் காதல் என்றும் வாழும், அவர்களைப் போன்ற காதலர்களை வாழ வைக்கும்.

இருவருக்கு மட்டும்
கூடிக் களைத்த அந்த குறுகிய பொழுதில்தான்
ஆடிக் களைத்த என் ஆணவம் அழிந்தது.
தேடிக் களைத்த உன் தேனிதழ் ஓரத்தில்
மூடிக் களைத்த அந்த முத்தச் சுவையை
பாடிக் களைத்த என் பைந்தமிழ் சொல்லும்.
நாடிக் களைத்தனன் நானும் முன்னொருகால்
கூடிக் களைக்கும் அந்த குளிர்நாள் நோக்கி

என்னை அப்போது மறுத்ததும் ஏனோ?
பின்னை இப்போது பெற்றதும் ஏனோ?

நான் தொடங்கிய இடம் மட்டும்
துல்லியமாய் நினைவிருக்க,
முடிக்கும் நினைவே
முற்றிலுமாய் எனக்கில்லை.

நான் என்ன இழந்துவிட்டேன்?
நான் என்னை இழந்துவிட்டேன்..
நீ
என்னுள் நுழைந்த அந்த
இனிய நொடிப்பொழுதில்
கணக்கில்லா களிப்பில் நான்
கண்மூடிக் கிடந்ததுவும்,
காதலும் காமமும் கலந்து
கனற்மூட்ட என்
காதருகில் வந்து நீ
கவிதைகள் சொன்னதுவும்,
இன்பம் இவையன்றோ?
ஈதின்றி வேறொன்றோ?

உனை
மஞ்சத்தில் வீழ்த்திக்
கொஞ்சிடத்தான் என்
நெஞ்சத்தில் நெடுநாளாய் ஆசை
பஞ்சத்தில் தவித்த என்
உள்ளத்தில் பாயவந்த
வெள்ளமும் நீதோனோ?
உன் கண்ணிரண்டால் எனை நோக்கி
கனிவு கொஞ்சம் அதிற் கூட்டி
மெல்லிதழ் மெல்லத் திறந்து
சொல்வாயோ அன்பே,
எனைக் காதலிப்பதாய்?
நம் இருவருக்கு மட்டும் கேட்குமாறு.

(முற்றும்)
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி  radharajesh18@gmail.com.